செய்திகள்

யுத்த குற்றச்சாட்டை விசாரிக்க உண்மை , சகவாழ்வு ஆணைக்குழுவை நிறுவ இலங்கை அரசாங்கம் திட்டம்

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரிப்பதற்கென தென் ஆபிரிக்கா அரசின் உதவியுடன் உண்மை மற்றும் சகவாழ்வு தொடர்பான ஆணைக்குழுவை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஆணைக்குழுவை எதிர்வரும் யூன் மாதமளவில் அமைப்பதற்க திட்டமிடப்பட்டு;ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பாக தென்னாபிரிக்கா அரசாங்கத்துடன் கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கும் மற்றும் இது தொடர்பாக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் எதிர்பார்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த அரசாங்கத்தின் போது இந்த ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பாக ஆராயப்பட்ட போதும் அதற்கு ஹெல உறுமயவினர் எதிர்ப்புகளை வெளியிட்டமையினால் அந்த திட்டம் கைவிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.