செய்திகள்

யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு மத்தியிலும் உக்ரைனில் மோதல்கள்

உக்ரைன் தொடர்பாக சமாதான உடன்பாடொன்று எட்டப்பட்டுள்ள நிலையிலும் உக்ரைனிய படையினருக்கும் ரஸ்ய சார்பு கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் கடும்மோதல்கள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த டெபெல்ட்செவே நகரை கைப்பற்றுவதற்காக உக்கிரமான மோதல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சனிக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ள யுத்த நிறுத்தத்தை கண்காணிக்கவுள்ள குழுவினர் கடும்மோதல்கள் பல பகுதிகளில் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை பின்பற்றாவிட்டால் ரஸ்யா மேலும் தடைகளை எதிர்நோக்கலாம் என ஐரோப்பிய ஓன்றிய தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
வெள்ளிகிழை அதிகாலை டொனெஸ்டிக்கில் கடும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.எனினும் கடந்த சில வாரங்களை போன்று தீவிரமானவையாக அவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.