செய்திகள்

யுத்த வெற்றி நிகழ்வை சகலரும் இணைந்து பிரதேச ரீதியில் செய்யுங்கள் ; படையினரின் உறவினர்களுக்கு மஹிந்த கோரிக்கை

யுத்த வெற்றி தினத்தை அனுஷ்டிக்க விடாது அரசாங்கம் தடைகளை ஏற்படுத்துமாகவிருந்தால் மாவட்டம் அல்லது பிரதேச ரீதியில் சங்கங்களை இணைத்து அதனை அனுஷ்டிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவத்திலிருந்து உயிர் நீத்த மற்றும் அங்கவீனமானவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சங்கத்தினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் நேற்று அவர்களை சந்தித்த போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மே 19ம் திகதி நாட்டில் யுத்த்த்தை முடிவுக்கு கொண்டுவந்த தினமாகும். இதன்படி ஒவ்வொரு வருடமும் மே 19ம் திகதி இந்த தினத்தை அனுஷ்டிப்பது வழமையாகும். ஆனால் இம்முறை அரசாங்கம் அன்றைய தினத்திற்கான பெயரை மாற்றியுள்ளதாக அறிகின்றேன். அப்படி அந்த தினத்தை அனுஷ்டிக்க முடியாத வகையில் தடையேற்படுத்துமாகவிருந்தால் மாகாணம் அல்லது மாவட்டம் அல்லது பிரதேச ரீதியில் சங்கங்களை ஒன்றிணைத்து நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுங்கள். என கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.