செய்திகள்

யுத்த வெற்றி விழாவில் திரிபு படுத்தப்பட்ட தேசிய கொடி இருந்ததாம் ; பொலிஸாருக்கு தகவல் கூறும் டலஸ்

மாத்தரையில் கடந்த 19ம் திகதி நடைபெற்ற இராணுவ வீரர்கள் தின நிகழ்வின்போது தேசிய கொடிக்கு பதிலாக பச்சை கொடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்த வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நேற்று மாத்தறை பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அண்மையில் மாத்தறையில் நடைபெற்ற இராணுவ வீரர்கள் தினத்தின் போது  தேசிய கொடிகளுக்கு பதிலாக பச்சை நிற கொடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி தேசிய கொடி மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்த வேண்டும். எனக்கு பின்னால் சுற்றிக்கொண்டிருக்கும் இரகசிய பொலிஸாருக்கும் நான் இந்த தகலை தெரிவிக்கின்றேன். என அவர் தெரிவித்துள்ளார்.