செய்திகள்

யூடியூப் டிரெண்டிங்: முதலிடத்தில் ‘அண்ணாத்த’ பாடல்!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது.மறைந்த பாடகர் எஸ்.பி .பாலசுப்பிரமணியம் இப்பாடலை பாடியிருப்பது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அண்ணாத்த அண்ணாத்த’ என தொடங்கும் இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார். இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று வெளியான ‘அண்ணாத்த’ முதல் பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது .(15)