செய்திகள்

யேமனிலிருந்து மீட்கப்பட்ட 29 பேர் நாடு திரும்பினர்

யேமனிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களில் ஒரு பகுதியினர் நேற்று இரவு நாடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறாக 29 பேர் நேற்று இரவு 9 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலயத்தை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
யேமனில் தொடரும் மோதல் நிலைமை காரணமாக சீன கப்பலொன்றின் உதவியுடன் கடந்த திங்கட் கிழமை 40 இலங்கையர்கள் ஜிபூட்டி எனும் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டிருந்த நிலையில் அவர்களில் ஒரு பகுதியினரே நேற்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மற்றையவர்களை மிக விரைவில் நாட்டுக்கு அழைத்து வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.