செய்திகள்

யேமனில் அரச மாளிகைக்குவெளியே கடும்மோதல்

யேமன் தலைநகர் சனாவில் உள்ள அரசமாளிகைக்கு அருகில் அந்த நாட்டு படையினருக்கும் சியா கௌத்தி கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
அப்பகுதியிலும்,தேசிய பாதுகாப்பிற்கான தலைவரின் இல்லத்திற்கு வெளியேயும் துப்பாக்கி சத்தங்கள் கேட்டதாக தகவல்வெளியாகியுள்ளன.
இரு தரப்பும் மேற்கொண்டுவரும் கடும் தாக்குதலை தொடர்ந்து அரசமாளிகைபகுதியில் கடும் புகைமண்டலம் எழுந்துள்ளதாகவும், உடல்கள் பல வீதிகளில் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதியின் இல்லத்திற்கு வெளியெ பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.நகரத்தின் தென்பகுதியில்உள்ள ஹடா பகுதியிலும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.அரசாங்கத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் வசிக்கும் பகுதியில் கிளர்ச்சிக்;காரர்களின் நடமாட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் தலைமை பாதுகாப்பு அதிகாரியை சனிக்கிழமை கிளர்ச்சிக்காரர்கள் கடத்திய பின்னர் யேமனில் பதட்டம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
சாடா மாகாணத்திற்கு அதிகளவான சுயாட்சி கோரி 2004 முதல்கௌத்தி கிளர்ச்சிக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.சியா முஸ்லீம்களின் ஓரு பிரிவான ஜைடிசத்தை பின்பற்றுபவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ய+லை மாதம் முதல் இவர்கள் சுனி இஸ்லாமிய அமைப்பி;ன் ஆதரவுடன் செயற்படும் குழுக்களையும்,அல்ஹைடா சார்பு அமைப்பையும் தோற்கடித்துள்ளனர்.
2011 இல்இவர்கள் சடாவை கைப்பற்றியிருந்ததுடன், கடந்த செப்டம்பரில் தலைநகரையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.