செய்திகள்

யேமனில் சவுதி தலைமையிலான விமானப்படை தாக்குதலில் 23 பேர் பலி

யேமனில் நடைபெற்றுவரும் ஹவுதிகள் தலைமையிலான உள்நாட்டு புரட்சியை முறியடிக்க கடந்த மார்ச் மாதம் முதல் அங்கே களமிறங்கியுள்ள சவுதி அரேபியா தலைமையிலான கூட்டு விமானப்படைகள் இன்று நடத்திய தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர்.

சகைன் நகரில் உள்ள ஹவுத்தி படையினரின் ஆயுத களஞ்சியத்தை குறிவைத்து இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 23 ர் போராளிகள் பலியாகினர் என உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தலைநகர் சனா பகுதியில் ஹவுத்தி படைகளுக்கு சொந்தமான ஆயுத களஞ்சியம் மற்றும் விமானப்படை ஊழியர்கள் குடியிருப்பு மீதும் இன்று தாக்குதல் நடத்தப்பட்டது.