செய்திகள்

யேமனில் சவூதி தலைமையில் நடக்கும் தாக்குதல் சில தினங்களில் முடிவுக்கு வரும்

ஆகாய வழி தாக்குதல்களின் உதவியுடன் யேமனில் ஷியா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி தலைமையில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் சில தினங்களில் முடிவுக்கு வந்து விடும் என்று யேமன் அறிவித்திருக்கிறது.

சவூதி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருக்கும் யேமன் வெளிநாட்டமைச்சர் ரியாத் யசீன் இந்த இராணுவ நடவடிக்கை நீண்டு செல்லாது என்றும் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

சவூதி தலைமையில் அராபிய நாடுகள் இன்று 2 ஆவது நாளாக தாக்குதலை நடத்தின. இந்த தாக்குதல் பிராந்தியத்தில் ஒரு முரண்பாட்டை உருவாகும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

1