செய்திகள்

யேமனில் பணியாற்றும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை

யேமனில் தங்கியிருக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் நடவடிக்கையெடுத்துள்ளது.

யேமனில் தொடரும் மோதல் நிலைமை காரணமாகவே அங்கு பணியாற்றும் இலங்கையர்களை அழைத்து வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

49 இலங்கையர்களும் 3000ற்கும் மேற்பட்ட இந்தியர்களும் அங்கு பணியாற்றும் நிலையில் இந்திய பணியாளர்களுடன் இந்தியாவின் உதவியுடன் இவர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கையெடுத்துள்ளதாக இலங்கை வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.