செய்திகள்

யேமனில் விமானதாக்குதல்களில் 80 பேர் பலி

யேமனில் சவுதிஅரேபியா தலைமையிலான கூட்டணி நாடுகள் மேற்கொண்ட விமானதாக்குதல்களில் புதன்கிழமை 80ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விமானதாக்குதல்களிலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்
யேமனில் சவுதிவிமானதாக்குதலை ஆரம்பித்த பின்னர் ஓரேநாளில் மக்கள் அதிகளவில் கொல்லப்பட்டது இதுவே முதற்தடவை எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
சவுதிஅரேபியாவின் எல்லையிலுள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற விமான தாக்குதல்களில் 40 பேர் பலியானதாகவும், இவர்களில் அனேகமானவர்கள் பொதுமக்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பகுதியிலிருந்து ஹெளத்தி கிளர்ச்சிக்காரர்கள் சவுதிஎல்லையை நோக்கி தாக்குதலை மேற்கொண்டனர், சவுதிமேற்கொண்ட விமானத்தாக்குதல்கள் ஹெளத்தி கிளர்ச்சிக்காரர்களை தாக்காமல் பொதுமக்களை படுகொலைசெய்தன என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பல மணிநேரத்தின் பின்னர் தலைநகர் சனாவில் இடம்பெற்ற மற்றுமொரு விமானதாக்குதல்களில் 40ற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.