செய்திகள்

யேமன் ஜனாதிபதியின் அலுவலகத்தின் மீது விமான தாக்குதல்

யேமன் ஜனாதிபதி மன்சூர் ஹடி பயன்படுத்தும் கட்டிடமொன்றின் மீது போர் விமானங்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளன.
யேமனின் துறைமுக நகரான ஏடனில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விமானங்கள் தாக்குதல்களை மேற்கொண்டவேளை பதிலுக்கு விமான எதிர்ப்பு துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து அவ்விடத்திலிருந்து விமானங்கள் திரும்பி சென்றுவிட்டதாக கண்ணால் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட கட்டிடத்திற்குள் ஜனாதிபதியிருந்தாரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
தலைநகர் சனாவை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ஹெளத்தி போராளிகளுக்கு விசுவாசமான படையினர் இந்த தாக்குதலை மேற்கொணடிருக்லாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தலைநகர் சனாவில் போராளிகளால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி அவர்களிடமிருந்து தப்பிவந்து ஏடெனில் தஞ்சடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஏடனின் சர்வதேச விமானநிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல்களில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.