யேமன் தற்கொலைதாக்குதலில் 150ற்கும்மேற்பட்டவர்கள் பலி
யேமன் தலைநகர் சனாவிலுள்ள இரு மசூதிகளில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தற்கொலைகுண்டுதாக்குதல்களில் 150ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்,300ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
யேமன் வரலாற்றில் இடம்பெற்ற மிகமோசமான வன்முறைதாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
மதியத்தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மசூதிக்கு வெளியே இரத்தவெள்ளத்தில் உடல்கள் கிடப்பதையும்,காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்படுவதையும் தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன.
முதலில் தலைநகரின் தென்பகுதியிலுள்ள மசூதி மீது இரு தற்கொலைகுண்டுதாரிகள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
முதலில் ஓரு தற்கொலைகுண்டுதாரி தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் தன்னை வெடிக்கவைத்ததாகவும், மக்கள அங்கிருந்து தப்பியோட முயன்ற வேளை மசூதி வாசலில் நின்றிருந்த தற்கொலை குண்டுதாரி தன்னை வெடிக்கவைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
கொல்லப்பட்டவர்களின் உடற்பாகங்கள் மசூதி முழுவதும் சிதறி காணப்படுகின்றன,இரத்தம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகின்றது என சம்பவ இடத்திலுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
மசூதியின் கண்ணாடிகள் சிதறல்கள் காரணமாகவும் பலர் காயமடைந்துள்ளனர்.
தலைநகரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ள ஹெளத்தி போராளிகளின் ஆதராவளர்கள் அதிகமாக தொழுகையில் ஈடுபடும் மசூதிகளின் மீதே தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.குறிப்பிட்ட ஹெளத்தி அமைப்பிற்கும், அல்ஹைதா ஆதரவு அமைப்புகளிற்கும் இடையில் கடும் பகை காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலுக்கு எவரும் இதுவரை உரிமை கோரத போதிலும்,யேமனை தளமாக கொண்ட அராபிய வளைகுடாவிற்கான அல்ஹைடா அமைப்பு யேமனில் ஹெளத்தி அமை;பின் ஆதரவாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை கடந்த காலங்களில் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை யேமனில் ஐஎஸ் அமைப்பும் செயற்படதொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.