செய்திகள்

யேமன் தலைநகரில் பாரிய குண்டுவெடிப்பு: 37 பேர் பலி

யேமன் தலைநகர் சனாவில் உள்ள பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு வெளியே இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பு சம்பவத்தில் 37 பேர் கொல்லப்பட்டு 66 பேர் காயமடைந்துள்ளனர்.

காவற்துறையில் இணைவதற்கான நேர்முகபரீட்சைக்காக பலர் நீண்ட வரிசையில் காத்திருந்த வேளையே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நகர்முழுவதும் குண்டுவெடிப்பு சத்தத்தை கேட்க முடிந்ததாகவும் பாரிய புகை மண்டலம் எழுந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்பினை தொடர்ந்து அம்புலன்ஸகள் காயமடைந்தவர்களுடன் மருத்துவமனை நோக்கி செல்வதாகவும்,பலர் படுகாயங்களுடன் அப்பகுதியில் உதவிக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை உரிமை கோரத அதேவேளை அராபியவளைகுடாவிடாவிற்கான அல்ஹைடா என்ற அமைப்பு அந்த நாட்டில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Y2 Y3