செய்திகள்

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் முக்கிய அறிவித்தல்!

தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னாள் பொறுப்பாளர் திரு.இரா.நாகலிங்கம் ஜயா அவர்கள் இயற்கை மரணமடைந்துள்ளார்.
யேர்மனியில் தமிழ் மொழி கற்பித்தலுக்கு வித்திட்ட முதல்வர். தமிழாலயங்களின் கல்விப் பணியின் பொறுப்பாளராக உழைத்த உத்தமன். தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளராக வழிகாட்டிய உலகப் பெரும் தமிழன். ஐயாவின் இழப்பால் தமிழ்க் கல்விக் கழகக் குடும்பம் துயரில் ஆழ்ந்துள்ளது.
அவரின் இறுதி வணக்க நிகழ்வு பற்றிய விபரங்கள் இணையத்தளங்களில் உள்ளது. அந்நிகழ்வில் உங்கள் தமிழாலயத்தின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றார்கள், மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்து ஜயாவுக்கு இறுதி வணக்கம் செலுத்த வருமாறு இரங்கலுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொள்ளும் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், அனைவரும் சீருடையில் வாருங்கள். மலர்வளையம் எடுத்து வரலாம். அதே போன்று உங்கள் தமிழலாயம் சார்பாக இரங்கல் செய்தியையும் போதியளவு அச்சிட்டு எடுத்து வந்து, அனைவருக்கும் வழங்கலாம்.
ஐயாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்கு 023313778963 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.