செய்திகள்

யோசித ராஜபக்சவை பதவி விலக்குவது பற்றி ஆராயப்படும்

முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோசித்த ராஜபக்ச கடற்படைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட விதம் குறித்து விசாரணை செய்யவுள்ளதொடு அவரை  பதவி விலக்குவதா எனவும் ஆராயவுள்ளதாகவும் ராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜேவிபியினர் யோசித்த ராஜபக்சவுக்கு எதிராக முறைப்பாடு தெரிவித்தனர். ஆனால் இதுவரை விசாரணை நடாத்தப்படவில்லை.
அதேநேரம் அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.
இது தொடர்பாக ருவன் விஜேவர்தன ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் யோசித்த ராஜபக்ச கடற்படைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட விதம் குறித்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம். விசாரணை ஆரம்பிக்கப்படும். யோசித்தவை பதவி விலக்குவதா எனவும் ஆராயவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.