செய்திகள்

யோஷித்த தொடர்பாக கடற்படையின் விசாரணை ஆரம்பம் : கடற்படை பேச்சாளர்

யோஷித ராஜபக்‌ஷ கடற்படையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டமை மற்றும் அவர் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்கள் தொடர்பாக கடற்படையினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவ பேச்சாளர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யோஷித்த ராஜபக்‌ஷ கடந்த பெப்ரவரி 29ஆம் திகதி முதல் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் அவர் தொடர்பாக இரண்டு விடயங்களை அடிப்படையாக கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அவர் கடற்படையின் கடேற் பிரிவின் அதிகாரி பதவிக்கு எவ்வாறு நியமனம் பெற்றார். அதற்கான தகுதி அவருக்கு இருந்ததா என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோன்று அவரின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாகவும் விசாரணைகள்  இடம்பெற்று வருகின்றன. அவரின் அந்த பயணங்கள் உரிய அனுமதியுடனா இடம்பெற்றது என்றும் விசாரணைககள் நடக்கின்றன.என அவர் தெரிவித்துள்ளார்.