செய்திகள்

யோஷித்த பணி நீக்கம் செய்யப்பட்டார் : நேற்று முதல் அமுல் என கடற்படை அறிவித்தது

சீ.எஸ்.என் தொலைகாட்சி நிறுவனத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்‌ஷ கடற்படையில் வகித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை சுயாதீனமாக நடத்தும் நோக்கிலேயே அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
n10