செய்திகள்

யோஷித்த ராஜபக்‌ஷ மீது சி.ஐ.டி. விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் மகன் யோஷித்த ராஜபக்‌ஷ சி.ஐ.டி.யினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நாரஹென்பிட்டியிலுள்ள பொருளாதார நிலையத்திலிருந்து மீட்கப்பட்ட சிறிய ரக விமானம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

நாரேஹென்பிட்டி பொருளாதார மையத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த சிறிய ரக விமானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இதனை அங்கிருந்து அகற்றுவதற்கு சிலர் முயன்றபோதே பொலிஸார் விமானத்தை கைப்பற்றினார்கள்.

திரைப்பட இயக்குனர் ஒருவரிடமிருந்து இந்த விமானத்தை யோஷித்த வாங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.