செய்திகள்

ரசிகர்களுக்காக செய்கிறேனே – சூர்யா எடுத்த கடும் ரிஸ்க்

சூர்யா படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து கவரக்கூடியவர். இவர் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் படம் 24.

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இயக்குனர் விக்ரம் குமார், படத்தில் சூர்யா ஒரு மேம்பாலத்திலிருந்து டூப் இல்லாமல் குதித்தது குறித்து மனம் திறந்துள்ளார்.

இதில் ‘நான் எத்தனையோ முறை அவரிடம் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவர் “சார் பேன்ஸ் எல்லாரும் தற்போது தெளிவாக உள்ளார்கள், டூப் போட்டால் தெரிந்துவிடும், நானே குதிக்கின்றேன்” என அவரே குதித்தார்.

உண்மையாகவே இவை கடும் ரிஸ்க் தான், அந்த காட்சியை திரையில் பார்க்கும் போது உங்களுக்கே தெரியும்’ என கூறியுள்ளார்.

N5