செய்திகள்

ரஜினிகாந்துக்கு ஆண்டின் சிறந்த திரை ஆளுமை விருது

இந்த ஆண்டின் சிறந்த திரை ஆளுமைக்கான சிறப்பு நூற்றாண்டு விருதை ரஜினிகாந்த் பெறுகிறார்

நவம்பர் 20-ஆம் தேதி 45-வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் தொடங்குகிறது. தொடக்க விழாவில் இந்திய திரை உலகின் இரண்டு பெரும் சூப்பர் ஸ்டார்கள் மேடையைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

72 வயதாகும் அமிதாப் பச்சன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் இந்த விழாவில், இந்த ஆண்டின் சிறந்த திரை ஆளுமைக்கான சிறப்பு நூற்றாண்டு விருதை ரஜினிகாந்த் பெறுகிறார். இதனை தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் அறிவித்தார்.

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 75 நாடுகள் பங்கேற்கின்றன. 61 அயல்நாட்டு திரைப்படங்களும் ஆசியாவிலிருந்து 7 திரைப்படங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன.

ஈரான் இயக்குனர் மோசன் மக்மாபஃப் என்பவரின் ‘தி பிரசிடெண்ட்’ என்ற திரைப்படத்துடன் விழா தொடங்குகிறது.