செய்திகள்

ரஜினியை இயக்கும் வாய்ப்பு! ரஞ்சித்துக்கு வழிவிட்ட ஞானவேல்ராஜா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும் சூர்யாவின் நடிப்பில் ஒரு படத்தையும், மற்றொரு முன்னணி நடிகரின் நடிப்பில் இன்னொரு படத்தையும் அடுத்தடுத்து இயக்கித் தருவதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவிடம் ரஞ்சித் ஒப்பந்தம் செய்திருந்தாராம்.

இந்த நேரத்தில் தான் ரஜினியின் படத்தை இயக்க ரஞ்சித்துக்கு வாய்ப்பு கிட்டியது. ஆனால் ஞானவேல்ராஜாவிடம் ஒப்பந்தம் செய்துகொண்டதால் ரஞ்சித் தவித்திருக்கிறார். இத்தகவலை கேள்விப்பபட்ட ஞானவேல்ராஜா, தங்கள் படத்தை ஒத்திவைத்துவிட்டு, ரஜினியின் படத்தை இயக்குமாறு ரஞ்சித்துக்கு வழிவிட்டாராம்.

இது குறித்து ஞானவேல்ராஜா கூறுகையில்,

இரண்டு படங்கள் இயக்கித்தருவதாக எங்களிடம் ரஞ்சித் ஒப்பந்தம் செய்து கொண்டது உண்மை தான். ஆனால் ரஜினி படத்தை இயக்க ரஞ்சித்துக்கு வாய்ப்பு கிடைத்ததும், அவருக்கு குறுக்கே நிற்க நாங்கள் விரும்பவில்லை. ரஜினி படத்தை முடித்துவிட்டுத் தான் ரஞ்சித் எங்கள் படத்தை இயக்குவார் என்று கூறினார்.

இதனால் ரஜினி படத்தை இயக்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியில் இருந்த ரஞ்சித், இக்கட்டான நேரத்தில் கைகொடுத்த ஞானவேல்ராஜாவால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார். மகிழ்ச்சியடைந்தது ரஞ்சித் மட்டுமல்ல, ரஜினி ரசிகர்களும் தான். சீக்கிரம் தலைவர், சென்னை தமிழ் பேசி நடிக்கின்றாரா என்பதை சொல்லிடுங்க பாஸ் என்று ரஜினி ரசிகர்கள் ரஞ்சித்துக்கு வேண்டுகோளும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.