செய்திகள்

ரஜினி ஜோடியாகும் வித்யாபாலன்

ரஜினியின் புதிய படத்தை அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கப் போகிறார் என்கிற செய்திதான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதைவிட, இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ரஜினி, தனது முந்தைய படங்களில் தமிழ் மற்றும் பிற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அதேபோல், இந்த படத்திலும் முன்னணி நடிகை ஒருவரைத்தான் நடிக்க வைக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தது.

முதலில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவைத்தான் நடிக்க வைக்கப்போவதாக செய்திகள் வந்தது.

ஆனால், தற்போது, நயன்தாராவுக்கு கல்தா கொடுத்துவிட்டு, இந்தியில் பிரபல நடிகையாக வலம் வரும் வித்யாபாலனை தேர்வு செய்யப்போவதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே, ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் வித்யாபாலனைத்தான் ஹீரோயினாக தேர்வு செய்தனர். ஆனால், கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹாவுக்கு போனது.

ஆகையால், இந்த படத்திலாவது வித்யாபாலனை ரஜினிக்கு ஜோடியாக போட்டுவிடலாம் என்ற முடிவில் அவரை தேர்வு செய்யப் போவதாக கூறப்படுகிறது. எனினும், இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.