செய்திகள்

ரஞ்சனுக்காக எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் போராட்டம்: சபையில் அமைதியின்மை

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பாராளுமன்றம் வர அனுமதியளிக்க வேண்டுமென்று கோரி எதிர்க்கட்சியினால் சபையில் போராட்டத்தில் ஈடுபடுவதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை இன்னும் இராத்தாகாத நிலையில் அவரை பாராளுமன்றம் அழைத்துவருவதற்கு சபாநாயகர் இடமளிக்காது இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

சபாநாயகர் இது தொடர்பாக நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

இதன்போது ஆளும் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

இவ்வேளையில் எதிர்க்கட்சியினர் ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர வேண்டுமென்று கோரி கோசம் எழுப்பி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. -(3)