செய்திகள்

ரஞ்சித் தேவசிறி மீது இனந்தெரியாத குழு தாக்குதல்

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் சிவில்  சமூக செயற்பாட்டாளருமான கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று இரவு கிருளப்பனை பகுதியில் வைத்து இவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகவும் தற்போது அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆட்சிக்காலத்தில் கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள் உட்பட  பல்வேறு விடயங்கள் தொடர்பாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.