செய்திகள்

ரணிலிடம் சேறு பூசும் அரசியல் கிடையாது , கூட இருந்தவர்களே இன்று என் மீது சேறு பூசுகின்றனர் : மஹிந்த

பிரதமர் ரணில்  விக்கிரமசிங்க சேறுபூசும் அரசியல் செய்பவர் அல்லவெனவும் தன்னிடம் உதவிகளை பெற்றுக்கொண்ட மற்றும் தன்னுடனே இருந்தவர்களே  தன் மீது சேறு பூசும் அரசியல் செய்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். சிங்கள நாளேடொன்றுடனான தொலைபேசி உரையாடலின் போதே மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சேறு பூசும்  செயற்பாடுகள் முடிவின்றி முன்னெடுக்கப்படுகின்றன. முழு குடும்பம் மீதும் சேறு பூசுகின்றனர். இன்று ஊடகங்களில் பிரதான காட்டூன் படமாக நானே காணப்படுகின்றேன். அதனை பார்த்து நான் சிரிப்பேன். ஆனால் ஊடகங்கள் எப்போதும் எம்முடனேயே இருக்கும்.
என்ன புதுமையென்றால் என் வீட்டில் என்னுடன் இருந்த மற்றும் வீட்டு தென்னை மரத்தில் இளநீர் பரித்து குடித்தவர்கள் கூட இன்று எனக்கு எதிராக செயற்படுகின்றனர். அதனை என்னி நான் கோவப்பட போவதில்லை.சமூகத்தின் மாதிரி அப்படித்தான்.  எவ்வாறாயினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சேறு பூசும் அரசியல் கிடையாது. என மஹிந்த அந்த தொலைபேசி உரையாடலில் தெரிவித்துள்ளார்.