செய்திகள்

ரணிலின் கருத்திற்கு ராஜித கடும் எதிர்ப்பு

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிமீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்வதற்குஉரிமையுள்ளது என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதற்கு அமைச்சரவை பேச்சாளர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.இலங்கை பிரதமரின் இந்த கருத்தினை தான் அங்கீகரிக்கவில்லையென அமைச்சரவை பேச்சாளர் ராஜிதசேனரத்தின இந்தியன் எக்ஸ்பிரசிற்கு தெரிவித்துள்ளார்.

ரணில்விக்கிரமசிங்க ஏன் மீண்டும் இவ்வாறு கருத்துவெளியிடவேண்டும் என்ற கேள்விக்கு ரணில்விக்கிரமசிங்க இந்திய மீனவர்களின் ஊருடுவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி மீனவர்களின் ஆதரவை பெறும் நோக்கத்துடன் இநத கருத்தை வெளியிட்டிருக்கலாம்என ராஜிதசேனரத்தின தெரிவித்துள்ளார்.

மேலும் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடனான ரணில்விக்கிரமசிங்கவின் மோதலின் ஓரு பகுதியாகவும் இது அமைந்திருக்கலாம்,தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவான மீனவர்களை; அவர் தன் பக்கம் திருப்பமுயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ள ராஜித இலங்கை அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் தெரிவித்திருப்பது ஓரு கவலை தரக்கூடிய கருத்து இது ஓரு மனிதாபிமான பிரச்சினை,எல்லை தாண்டிமீன்பிடிப்பதற்கு மீனவர்களினை மாத்திரம் குற்றம்சாட்ட முடியாது,டிரோலர் படகுகளின் உரிமையாளர்களையும் குற்றம்சாட்டவேண்டும்,அவர்களே மீனவர்களை எல்லை தாண்டுவதற்காக அழுத்தங்களைகொடுக்கின்றனர் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.