ரணிலுக்கான ஆதரவை உறுதிப்படுத்திய 92 எம்.பிக்கள்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 92 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து அவருக்கான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் அவரை சந்தித்து தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடத் தீர்மானித்துள்ள நிலையில் அவரை வெற்றியடையச் செய்வோம் என்று அவர்கள் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தில் அந்தக் கட்சி சார்பில் மொட்டு சின்னத்தில் வேட்பாளர் ஒருவரை களமிறக்க தீர்மானித்ததை தொடர்ந்து இவ்வாறாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளனர்.
-(3)