செய்திகள்

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையில் காணப்படும் கையொப்பங்களில் குழப்பம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கயைில்லா பிரேரணையில் காணப்படும் கையொப்பங்கள் தொடர்பாக சிக்கலகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கையொப்பங்களில் சிலரின் கையொப்பங்கள் இரண்டு தடவைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக லொகான் ரத்வத்தவின் கையொப்பம் இரண்டு இடங்களில் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் குறித்த பிரேரணையில் 81 பேரே கையொப்பமிட்டுள்ளதாகவும் அவற்றில் போலி கையெழுத்துகள் காணப்படுவதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.