செய்திகள்

ரணில்தான் ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர்: சஜித் பிரேமதாச உறுதி

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தமது வேட்பாளராக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே ஐக்கிய தேசியக் கட்சி தெரிவு செய்திருக்கின்றது எனத் தெரிவித்திருக்கும் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, இவ்விடயத்தில் வாதப்பிரதிவாதங்களுக்கு இனி இடமில்லை எனவும் அறிவித்திருக்கின்றார்.

ஐ.தே.க.வின் சார்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியடப்போவது யார் என்பதையிட்டு விவிவாதிப்பதில் அர்த்தமில்லை. ஏனெனில் ரணில் விக்கிரமசிங்கவை இந்தத் ர்தலில் களமிறக்குவதற்கு ஐ.தே.க. ஏற்கனவே தீர்மானித்துவிட்டது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த நாட்டை அழிவுப் பாதையில் கொண்டுசெல்லும் ஊழல்மிக்க இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் ரணில் விக்கிரமசிங்க உறுதிபூண்டுள்ளார் எனவும் சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாச, தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடிய ஒரே கட்சியாக ஐ.தே.க.வே உள்ளது எனவும் குறிப்பிட்டார்.