செய்திகள்

ரணில் இன்று முல்லைத்தீவு விஜயம்

வடக்கிற்கு மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட காரியாலயத்தில் அரச அதிபர் மற்றும் உத்தியோகஸ்தர்களுடனான சந்திப்பொன்றை நிகழ்த்தவுள்ளதோடு,

மாலை 3.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஜக்கிய தேசிய கட்சி அலுவலகத்தை திறந்துவைக்கவுள்ளதாக கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் இந்திரன் சஜிந்திரன் தெரிவித்துள்ளார்.