செய்திகள்

ரணில் இரண்டுதடவை எப்படி பிரதமரானார்: விளக்குகிறார் சுசில்

இரண்டு தடவை ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தயவுடனே பிரதமரானார். 2001ஆம் ஆண்டு 19 சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுடன் ஐதேகவுடன் இணைந்தமையால் ரணில் பிரதமரானார்.

2015 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்  மைத்திரியை ஆதரித்ததால் பிரதமரானார். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் சுதந்திரக்கட்சியாலேயே ரணில் பிரதமனார். எனவே பிரதமராக ரணில் பின்கதவு வழியாகவே வந்துள்ளார்.

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சுசில்பிரேம ஜயந்த எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.