செய்திகள்

ரணில் – சம்பந்தன் சந்தித்துப் பேச்சு: கிளிநொச்சி காணி ஆக்கிரமிப்பு குறித்து ஆராய்வு

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் இன்று புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, கிளிநொச்சியில் மக்கள் காணிகளை இராணுவத்தினர் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளமை தொடர்பில், பிரதமரிடம் அவர் முறையிட்டுள்ளார். இந்தப் பகுதிக்கு கடந்த வாரம் சம்பந்தன் நேரில் சென்று வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
R-06