செய்திகள்

ரணில் திடீர் இந்திய விஜயம் குருவாயூரில் விஷேட வழிபாடு

இலங்கையில் அரசியல் சர்ச்சைகள் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது மனைவி சகிதம் இன்று காலை திடீரென இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

கேரளவில் கொச்சிம் சென்ற அவர், குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் தனது மனைவியுடன் இன்று பகல் சென்று வழிபாடு நடத்தினார். அப்போது தனது எடைக்கு எடை வாழைப்பழம், சர்க்கரை, பூக்கள் போன்றவற்றுடன் 77 கிலோ சந்தனக்கட்டைகளையும் அவர் காணிக்கையாக அளித்தார் என இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலை காலை 7.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, கேரள மாநிலத்தில் உள்ள கொச்சினுக்குப் புறப்பட்ட சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் மூலம், ரணில் விக்கிரமசிங்க, புறப்பட்டுச் சென்றதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமருடன் அவரது மனைவி உட்பட நான்கு பேர் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. குருவாயூரில் வழிபாடுகளை முடித்துக்கொண்டு இன்று இரவு அவர் கொழும்பு திரும்புவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

நாளை நடைபெறவிருக்கும் முக்கியமான கூட்டங்கள் சிலவற்றிலும் அவர் பங்குகாள்வார்.