செய்திகள்

ரணில் பிரதமராவதற்கு தானே காரணம் என்கிறார் திஸ்ஸ அத்தநாயக்க

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி வகிப்பதற்கு கடந்த கலங்களில் ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதற்காக தான் மேற்கொண்ட செயற்பாடுகளே காரணமென அந்த கட்சியின் முன்னாள் செயலாளரும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மஹிந்த அணியுடன் இணைந்துக்கொண்டவருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று  மகாநாயக்க தேரர்களை சந்திப்பதற்காக அவர் கண்டிக்கு சென்றிருந்த போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த சில வரடங்களாக ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஒற்றுமையிருக்கவில்லை. சஜித் பிரேமதாஷ ஒருபக்கம் ரணில் ஒருபக்கம் என்றே கட்சி காணப்பட்டது. ஆனால் நான் கட்சியை பாதுகாத்து இருவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். கட்சிக்காக நான் வழங்கிய பங்களிப்பின் பலாகவே ரணில் இன்று பிரதமராக இருக்கின்றார்.
இதேவேளை எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவேன். நன்றாக சிந்தித்து முடிவுகளை எடுப்பேன். என அவர் தெரிவித்துள்ளார்.