செய்திகள்

ரணில் பெண் போன்றவர் என்கிறார் நிசாந்த முத்து ஹட்டிகம

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெண் போன்று செயற்படுவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி எம்.பி. நிசாந்த முத்துஹெட்டிகம குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரதமரிடம் ஆளுமை கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். விக்கிரமசிங்க போன்ற பெண் பிரதமருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தொடர்புகள் குறித்து அவர் கவலையை வெளிப்படுத்தியுள்ளார். தன்னைப் பொறுத்தவரை இலங்கையின் ஜனாதிபதி இப்போதும் மகிந்த ராஜபக்சவே என்று அவர் கூறியுள்ளார். எதிரணி உறுப்பினர்கள் பலர் இப்போது கைது செய்யப்படுகின்றார்கள்.

இந்நிலையில் மகிந்த ராஜபக்ச தொடர்பாக சாதகமான விடயங்கள் எதனையும் தெரிவிப்பதில் ஊடகங்கள் அச்சப்படுகின்றன. பிரதமராக மகிந்தராஜபக்சவை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு நாங்கள் செயற்படுகின்றோம் என்று முத்து ஹெட்டிகம மேலும் தெரிவித்துள்ளார்.