செய்திகள்

ரணில் விக்கிரமசிங்கவின் வாகனத் தொடரணி மீதான தாக்குதல்: எட்டுப்பேர் கைது

இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பலாங்கொடையில் வைத்து ரணில் விக்கிரமசிங்கவின் வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பலப்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் தயாரட்ண டி சில்வா உட்பட எட்டுப்பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருக்கின்றார்.

கைது செய்யப்பட்டவர்களில் பலப்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளர் ஜெயத் பிரியந்த சில்வாவும் உள்ளடங்குகின்றார்.

அம்பலாங்கொடைப் பகுதியில் இடம்பெற்ற புயலால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிடுவதற்காக 2013 ஜூன் 11 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க அந்தப் பகுதிக்கு நேரில் சென்றிருந்தார். அப்போது அவருடைய வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இது தொடர்பாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து எட்டுப்பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவர்கள் பலாங்கொட நீதிமன்றத்தில் நேறறைய தினம் ஆஜர் செய்யப்பட்டனர்.