செய்திகள்

ரத்கம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை

இலங்கையின் தென்மாகாணத்திலுள்ள ரத்கம பிரதேச சபையின் தலைவர் மனோஜ் புஷ்பகுமார மெண்டிஸ் சுட்டுக்கொலைச்செய்யப்பட்டுள்ளார். அவர், தனது நண்பர்களுடன் ஹிக்கடுவையிலுள்ள ஹோட்டலில் தங்கியிருந்த போதே சுட்டுக்கொலைச்செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவருடன் இருந்த நண்பர்களே அவரை சுட்டுக்கொலைச்செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். அவ்விருவரும் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.