செய்திகள்

ரத்கம பிரதேச சபை தலைவர் சுட்டுக்கொலை

காலி ரத்கம பிரதேச சபையின் தலைவர் மனோஜ் புஸ்பகுமார மென்டிஸ் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஹிக்கடுவ நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் பிரதேச சபைத் தலைவர்மீது நேற்றிரவு 11.45 அளவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் பலத்த காயங்களுக்கு இலக்கான பிரதேச சபை தலைவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். அடையாளம் காணப்படாத நால்வர் அடங்கிய குழுவினர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மேலும் இருவர் கவலைக்கிடமான நிலையில் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட ரத்கம பிரதேச சபை தலைவரின் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.