செய்திகள்

ரயில்வே வேலை நிறுத்தத்திற்கு திட்டம்!

ரயில் சாரதிகள் இன்று (09) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி ரயில்வே பொது முகாமையாளரிடம் முன்வைக்கப்பட்ட பல விடயங்கள் தொடர்பில் சாதகமான முடிவுகள் கிடைக்கப்பெறாதமை மற்றும் நியாயமற்ற வரி அறவீடு தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தொழிற்சங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் நள்ளிரவுக்கு பின்னர் ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடையலாம் என்று கூறப்படுகின்றது.

-(3)