செய்திகள்

ரயில் மிதிப்பலகையில் பயணித்த இருவர் பாலத்தில் மோதி உயிரிழப்பு

கொழும்பிலிருந்து வவுனியா சென்ற ரயிலின் மிதிப்பலைகையில் பயணித்த இளைஞர்கள் இருவர் மீ ஓய பாலத்தில் மோதி உயிரழந்துள்ளனர்.
நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர்கள் ரயில் மிதிப்பலகையில் பயணித்துள்ள நிலையில் குறித்;த பாலத்தில் மோதி ஆற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த இருவரும் யார் என்பது தொடர்பாக இது வரை அடையாளம் காணப்படவில்லை. குறித்த சடலங்கள் இரண்டும் கலகமுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது