செய்திகள்

ரவிகருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பிக்கள் நம்பிக்கையில்லா பிரேணையொன்றை சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவிடம் சமர்ப்பித்துள்ளனர்.

100பேரின் கையொப்பங்கள் அடங்கியதாக குறித்த பிரேரணை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இரத்தினப்புரி மாவட்ட எம்.பியான ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார.

மத்திய வங்கி ஆளுனராக அர்ஜுன மகேந்திர நியமிக்கப்பட்டமை மற்றும் அவருடாக இடம்பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்கல் விவகாராம் ஆகிய விடயங்களை அடிப்படையாக கொண்டு நிதி அமச்சர் என்ற வகையில் ரவிகருணாநாயக்கவுக்கு எதிராக அந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.