செய்திகள்

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதிக்க அரசு அனுமதி

ஜூலை 4 ஆம் திகதி அமைச்சர் ரவி கருணாநாயகவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றில் விவாதிக்க அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

மேலும், நாளை நடைபெறவுள்ள கட்சித்தலைவர்களின் சிறப்புக்கூட்டத்தில் இது தொடர்பாக பேசப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் அமைச்சர்  லக்ஸ்மன் கிரியெல்லவும் இந்த கருத்தை உறுதிசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.