செய்திகள்

ரவிராஜ் கொலை வழக்கின் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் ஐவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரணைகளின் போது, கொலைக்கு பயன்படுத்தியதாக கூறப்பட்டும் துப்பாக்கியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இரத்த மாதிரிகள், டீ.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இரகசிய பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர்கள் கூறினர்.

தகவல்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதன்படி குறித்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதான கடற்படை வீரர்கள் ஐவரும் எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.