செய்திகள்

ரவிராஜ் படுகொலை: கைதான 3 கடற்படையினரிடம் விசாரணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் மற்றும் பொலிஸார் மூவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கடற்படை அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

2006 ஆம் ஆண்டு ரவிராஜ் கொழும்பு நகரில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பான விசாரணைகளின் போது கடற்படையினர் இதில் சம்பந்தப்பட்டமை தெரியவந்ததையடுத்தே அவர்கள் கைதாகி விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.