செய்திகள்

ரவி – பந்துல விவாதம் ஒத்திவைப்பு

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் ஆகியோருக்கிடையேயான நேரடி விவாதம் அடுத்த மாதம் 7ம் திகதி நடைபெறவுள்ளது.

நேற்று முன் தினம் இரவு இருவருக்குமிடையேயான விவாதத்தை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட போதும் பந்துல குணவர்தனவுக்கு முடியாமையினால் அது 7ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முதலில் தேசிய தொலைக் காட்சியில் அந்த விவாத்தை ஒளிபரப்ப திட்டமிட்டிருந்த போதும் அதற்கு பந்துல இணங்காமையினால் இருவரும் வேறு தொலைக்காட்சி அலைவரிசையொன்றை தெரிவு செய்து விவாதத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.