செய்திகள்

ரஷ்சியாவின் ஊருடுவலை எதிர்கொள்ள தயாராகுமாறு இராணுவத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி அழைப்பு

ரஷ்சியாவின் முழுமையான ஊருடுவல் நடவடிக்கையொன்றை எதிர்கொள்வதற்கு உக்ரைன் இராணுவம் தயாராகவேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி பெட்ரோ பொரொசொன்கோ எச்சரித்துள்ளார்.
உக்ரைன் நாடாளுமன்றத்திற்கான வருடாந்த உரையின் போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அதிகரித்து வரும் வன்முறைகள் காரணமாக மிகப்பெரும் ஆபத்து ஏற்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்
உக்ரைன் இராணுவம் எதிரிகளின் புதிய தாக்குதலுக்கு தயாராக வேண்டும்,அதேவேளை எல்லை முழுவதும் ரஸ்சிய படையினர் மேற்கொள்ள கூடிய ஊருடுவலை எதிர்கொள்ளவும் தயாராகவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

உக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் பிரிவினைவாதத்தை விதைப்பதற்கு கிரெம்ளின் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாவும், அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்சியா உக்ரைன் விவகாரத்தில் தான் தலையிடவில்லை என ரஷ்யா தெரிவிக்கின்றபோதிலும் அந்த நாடு 9000 படையினரை தனது எல்லையில் நிறுத்தியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.