செய்திகள்

ரஷ்சியாவில் பயிற்சி பெற்றவர்கள் கைது என்கிறது உக்ரைன்

உக்ரைன் தனது நாட்டின் கிழக்கு பகுதியில் காணப்படும் குழப்ப நிலை நாடு முழுவதிலும் பரவக் கூடும் என அச்சம் வெளியிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பேரணியொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்னரே இவ்வாறான அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட குண்டு தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஓருவரும் பேரணியில் கலந்து கொண்ட ஓருவரும் கொல்லப்பட்டுள்ள அதேவேளை ரஸ்சியாவால் பயிற்சியளிக்கப்பட்டு ஆயுதங்கள் வழங்கப்பட்ட நால்வரை கைதுசெய்துள்ளாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். iதுசெய்யப்பட்ட நால்வரும் மேலும் பல தாக்குதல்களைமேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும், அவர்களிடம் ரஸ்சிய தயாரிப்பு ஆயுதங்கள் காணப்பட்டதாகவும் உக்ரைனிய பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் உக்ரைன் பிரஜைகள், ரஸ்சியாவில் ஆயுத பயிற்சி பெற்றவர்கள், உக்ரைனிய பாதுகாப்பு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.