செய்திகள்

ரஷ்யாவின் நிகழ்வில் உலக நாடுகள் கலந்துகொள்வதை அமெரிக்கா தடுப்பதாக குற்றச்சாட்டு

இரண்டாம் உலகயுத்தம் முடிவடைந்து 70 வருடங்களாவதை குறிக்குமகமாக ரஷ்யா ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகளில் உலகநாடுகளின் தலைவர்களை கலந்துகொள்ளவேண்டாமென அமெரிக்கா வற்புறுத்தி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குற்றம்சாட்டியுள்ளார்.
நாசிகளினால் கொல்லப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்துதற்காகவும், நாசிகளுக்கு எதிரான வெற்றியை குறிக்குமுகமாகவும் மே 9 திகதி ரஷ்யா விசேட இராணுவ அணிவகுப்பு மரியாதையொன்றை நடத்தவுள்ளது.
எனினும் மொஸ்கோ உக்ரைன் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவளிப்பதன் காரணமாக பல உலக தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள மறுத்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள புட்டின் கலந்துகொள்ள விருப்பமில்லாதவர்கள் யாராக இருந்தாலும் கலந்துகொள்ளாமல் விடலாம் என தெரிவித்துள்ளார்.
இது ஓவ்வொரு நாட்டினது தலைருடைய மற்றும் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் தேசத்தினது முடிவு,சிலர் கலந்து கொள்ளவிரும்பவி;ல்லை வேறு சிலர் கலந்துகொள்ளாமல் தடைசெய்யப்பட்டுள்ளனர், அமெரிக்கா அவர்களை இந்த நிகழ்விற்கு செல்லவேண்டாமென தெரிவித்துள்ளது என புட்டின் குறிப்பிட்டுள்ளார்.
உலகநாடுகள் பலவற்றின் தலைவர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ள மறுத்துள்ளது ரஸ்சியாவுடனான அவர்களது விரிசவை வெளிப்படுத்தியுள்ளது.
அதேவேளை இந்த நிகழ்வுகளில் சீனா மற்றும் தென்கொரிய தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இது ஆசியாவில் புதிய உறவுகளை ஏற்படுத்தும் ரஷ்சியாவின் முயற்சிகளையும் வெளிப்படுத்தியுள்ளது.