செய்திகள்

ரஷ்யாவின் முன்னாள் பிரதி பிரதமர் சுட்டுப் படுகொலை

ரஷ்யாவின் முன்னணி எதிர்க்கட்சி அரசியல் வாதியும் முன்னாள் பிரதி பிரதம மந்திரியுமான பொரிஸ் நெம்ச்டொவ் நேற்று இரவு இனம்தெரியாத நபர்களினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்ய பாராளுமன்றத்துக்கு அருகில் தனது காரில் பாலம் ஒன்றை கடந்துகொண்டிருந்தபோது இனம்தெரியாத துப்பாக்கிதாரி அவரை அவரது பின்பக்கத்தில் நன்கு முறை சுட்டு அவரை படுகொலை செய்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரைனில் நடைபெறும் யுத்தத்துக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாபெரும் பேரணி ஒன்றுக்கு பொதுமக்களின் ஆதரவை கோரியிருந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உலகத் தலைவர்கள் பலரும் இந்த கொலைக்கு கடும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.

1 2 3